
15 மாதங்களுக்கும் அதிக காலம் நீடிக்கும் அமெரிக்க – சீன வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரண்டு நாடுகளும் முதற்கட்ட இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வொஷிங்டனில், ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தினருக்கும், சீன பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக இந்த மாதம் முதல் விதிக்கப்படவிருந்த புதிய வரியை பிற்போடுவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சவூதி அரேபியாவின் எரிபொருள் களஞ்சியங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு நிலைகொண்டுள்ள தமது படைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பென்டகனின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் நேற்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, செப்டம்பர் மாதம் முதல் மூவாயிரம் துருப்புகளுக்காக இரண்டு போர்ப்படைகளுடன், மேலதிக ஏவுகணை பாதுகாப்பு மின்கலம் என்பன சவுதி அரேபியாவுக்கு அனுவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் எரிபொருள் களஞ்சியங்கள் மீது கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் ஈரான் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply