
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 14ம் திகதி வரை முறைப்பாடு மற்றும் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்று இதன் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா செயற்படுவதுடன், மேன்முறையீட்டு நீதியரசர்களான நிஷ்ஷங்க பந்து சேன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜகருணா, பந்துல குமார அத்தப்பத்து மற்றும் செயலாளராக டபிள்யும்.எம்.எம்.ஆர்.அதிகாரி ஆகியோர் செயற்படுகின்றனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23ம் திகதி அல்லது 24ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
இந்த இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழு எதிர்வரும் 14ம் திகதி கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடந்த மே மாதம் 22ம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply