
கிளிநொச்சி- இரணைதீவுக்கு மிக நீண்டகாலத்தின் பின்னா் பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டிருக்கின்றது.
இரணைமாதாநகா் கடற்தொழிலாளர் சங்கத்தின் முயற்சியினால் 15 லட்சம் பெறுமதியான படகு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த படகில் சுமார் 50 பேருக்கு மேற்பட்ட மக்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகு சேவைக்கான அனுமதிகள் இன்றும் பெறப்படாத நிலையில் அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இரணைமாதா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இரணைமாதா நகரிலிருந்து இரணைதீவிற்கு குறித்த படகு சேவை உத்தியோகபூர்வமாக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது விசேட தேவைகள் மற்றும் விசேட நிகழ்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது, குறித்த படகு சேவையினை நேற்று வெள்ளிக்கிழமை
பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. படகு சேவைக்காக இரணைமாதா கடற்தொழிலாளர் சங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு அரச சட்ட திட்டங்களிற்கு அமைவாக குறைந்த கட்டணத்தில் விரைவில் முழுமையான சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply