
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தானில் சிறப்பாக நிறைவுற்றுள்ள நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பம் வெளியிட்டுள்ளது.
அயர்லாந்து கிரிக்கெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி வார்ரென் டியூட்றோம் இந்த விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
‘அயர்லாந்து அணி வளர்ந்து வரும் அணி மட்டுமல்லாது தற்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி கூட, என பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விளையாடி எங்களை நிரூபிக்க வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ‘ருவென்டி 20’ தொடர் பாகிஸ்தானில் இடம்பெற்ற போது, அயர்லாந்து கிரிக்கெட் தலைமை நிறைவேற்று அதிகாரியும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் கிரிக்கெட் சபை தலைமை நிறைவேற்று அதிகாரி ரொம் ஹரிசனும் பாகிஸ்தானில் இருந்து பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளனர்.
இந்நிலையிலேயே, பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக தாங்களும் அங்கு விளையாட விரும்புவதாக டியூட்றோம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply