
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடியில் ஈடுபடும் குழுக்கள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு, தம்மை தபால் பொதி சேவையாளர் என தெரிவித்து, அல்லது சீட்டிழுப்பில் பரிசு கிடைத்துள்ளதாக கூறி அவற்றை பெற்றுக்கொள்வதற்கான பணத்தை செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.
அந்த பணத்தொகையை அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கூறி பணம் வைப்பிலிடப்பட்டதன் பின்னர் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.
இவ்வாறு வெளிநாட்டவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான மோசடி செயல்கள் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் உள்நாட்டவர்களும் கணிசமான அளவு பணத்தை இழந்து வருவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Leave a Reply