
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
புனேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 601 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க நேற்றைய 3 ஆவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தியாவை விட 326 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் ‘பொலோ-ஒன்’ ஆன தென்னாபிரிக்கா இன்று ஆட்டம் ஆரம்பித்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடக் களமிறங்கியது.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. இறுதியில் 189 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Leave a Reply