
பெண்கள் உலக குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
11 ஆவது பெண்கள் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் இடம்பெற்று வருகிறது.
இன்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷ்யா வீராங்கனை எகாட்டரினாவுடன் மோதினார்.
இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் ரஷ்ய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
Leave a Reply