யாழ். சர்வதேச விமானநிலையத்திற்கு அர்ஜூன ரணதுங்க கண்காணிப்பு விஜயம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விஜயத்தை அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்கு பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும் எனவும், புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த விமான போக்குவரத்தின்போது தமிழ்நாட்டிற்கு 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வாரத்திற்கு 12 விமான சேவைகளாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *