
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர்களுடன் தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அமைப்பு சார்ந்த எங்களுடைய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசியுள்ளோம். தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, நிச்சயமாக இந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும் என எமக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply