
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு 25ஆயிரம் வாக்குகளையாவது பெறமுடியுமா என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
விஜயராமயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவது அப்பகுதி மக்களுக்கு சிறந்த பயனான ஒன்றாக அமையும்.
குறித்த விமான நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக என்னால் சமூகமளிக்க முடியவில்லை.
ஆனாலும் மிக விரைவில் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்குச் சென்று, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளேன்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் சந்திந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளேன்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், மக்களிடமிருந்து 25,000 வாக்குகளையாவது பெறுவாரா? என்பது சந்தேகமே” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply