
நுவரெலியாவில் முதலாவது கேபிள் கார் திட்டம் தொடர்பில் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை நேற்று செய்துக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த கேபிள் கார் திட்டத்துக்கு கடந்த ஜூலையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்த திட்ட நிர்மாணத்தை டொல்மே கேபில் நிறுவனமும், அவுட்டுர் என்ஞ்னியரிங் நிறுவனமும் மேற்கொள்கின்றன.
இந்த கேபிள்கார் திட்டம், நானுஓயா ரெயில்வே நிலையத்தில் இருந்து சிங்கல்றீ மற்றும் கிரகரி வாவி, ரேஸ்கோஸ் ஆகியவற்றுக்கு செல்லும் வகையில் 21 கோபுரங்களின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஒரு காரில் 10 பேரை ஏற்றிச்செல்லும் வகையில் 86 கார்கள் இயக்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 43கார்களுக்கான திட்டமே நிர்மாணிக்கப்படவுள்ளது.
Leave a Reply