
ஜனாதிபதி தேர்தலில் யார் வரக்கூடாது என்பது தொடர்பில் எமது மக்கள் சரியான தீர்ப்பினை சரியான நேரத்தில் வழங்குவார்கள் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய தூதுவர் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் அவர் முதல்வரிடம் விரிவாக கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

குறிப்பாக வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் மக்கள் இம்முறை எடுக்கும் முடிவினால் எவ்வாறான விளைவுகள் மற்றும் தேர்தல் முடிவுகள் அமையும் என்பது தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பும் அதன் பின்னர் வடக்கின் அபிவிருத்தியில் அது எந்தளவிற்கு தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பாகவும் அவருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் வாக்கு வீதம் முன்னரை விடவும் இத்தேர்தலில் அதிகளவாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
Leave a Reply