வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு தனது உயிரையும் அர்ப்பணிப்பேன்! – சஜித்

பிரேமதாச ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு தனது உயிரையும் அர்ப்பணிப்பார் என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இரத்தினபுரியை அபிவிருத்தியில் மிளிரும் ஒரு மாவட்டமாக மாற்றுதல், பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு சீறுடைத்துணிகளைப் பெற்றுக்கொடுத்தல், பாடசாலைகளில் மீண்டும் மதிய உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், சமுத்தியை மேலும் வலுப்படுத்தல், ‘ஜனசவிய’ திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றை நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் செயற்படுத்துவேன்.

மனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில், பிரேமதாச ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு தனது உயிரையும் அர்ப்பணிப்பார் என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அரசு சொத்துக்கள் மற்றும் வளங்களை அழித்த நபர்களுக்கு தனது அரசாங்கத்தில் இடமில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார்.

ஹாலி எல பகுதியில் இன்று இடம்பெற்ற பொது மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நீண்ட காலமாக நாட்டில் போதைப்பொருள் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்து வருவதாகவும், சிலர் இதைப் பற்றி பேச கூட பயப்படுகிறார்கள்.

சிலர் உயிர் இழப்பை ஏற்படுத்துவதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். எனினும், நூறாயிரக்கணக்கான பிற உயிர்களைக் காப்பாற்ற ஒரு உயிர் இழப்பை ஏற்படுத்த தான் தயங்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *