யாழ். சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தி ன் பணிகள் நேற்றய தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

நேற்று  Air India Alliance இந்திய விமானம் தரையிறங்கிய நிலையில் அந்த வானூர்த்தியில் வந்தவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் கடவுச்சீட்டுக்களில் நுழைவுவிசா அனுமதி முத்திரை குத்தப்பட்டதுடன் மாலை இந்தியா திரும்பியபோது  வெளியேறியமைக்கான முத்திரை கடவுச்சீட்டுக்களில் பொறிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினமே யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் 

குடிவரவு குடியகல்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை விமான நிலையத்தின் பயணிகளுகள் சேவைக்கு ஏற்ற தகுதி நிலைமைகள் தொடர்பாக இந்திய அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. கட்டங்கள், மின்சார வசதிகள்,  கட்டுமானப்பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை. அவற்றை நிறைவு செய்யும் வேலைகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது. 

சுமார் 10 தினங்களில் அவை நிறைசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *