
உத்தியோகபூர்வமாக இன்று திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் குடிவரவு, குடியகல்வுச் சட்டங்களின் கீழ், புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, இரத்மலானை சர்வதே விமான நிலையங்களும் புறப்படுகை மற்றும் உள்நுழைவுக்கான புதிய தளங்களாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரகடனம், உள்நாட்டு மற்றும் உள்விவகார மற்றும் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply