மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக சர்வதேச தரகர்களின் உதவியுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கடந்த சில மாதங்களாக மெக்ஸிகோவிற்கு 311 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டு தனியார் விமானங்களின் மூலம் 311 பேரும் மெக்ஸிகோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களிடம் தலா 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் ஊடுருபவர்களை தடுக்கும் விதமாக எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றையும் அமெரிக்கா எழுப்பி வருகிறது.
இதனால், அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற 311 இந்தியர்கள் மெக்ஸிகோவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஒரு பெண் உட்பட 311 இந்தியர்களுக்கும் ஒரு வழி பயண அவசர கால அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டு அனைவரையும் தனி விமானம் மூலம் Toluca விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் வழியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் விமானம் மூலம் இன்று டெல்லிக்கு திரும்ப உள்ளனர்.
Leave a Reply