ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 900 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் குறித்து 8 முறைப்பாடுகளும்; பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *