ஆப்கானிஸ்தான் கிழக்கு நங்கஹார் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின்; எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஸ்தரத்தன்மையையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயல்படும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இப்படியான கொடூரமான தாக்குதல்களை முறியடிக்க ஆப்கானிஸ்தான் மக்களுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வேளை மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 69 பேர் பலியானதுடன் 50 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தவிர, மேலும் பல சடலங்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply