குபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா?

குபேர பொம்மையை இனி மேல் இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்கள் வீட்டு கதவை தட்டும் .வீட்டில் சில நபர்கள் அலங்காரத்திற்காக குபேர பொம்மையை வைத்திருப்பர். அப்படி இருப்பவர்கள் பூஜை அறையில் வைத்து கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

வீட்டின் கிழக்கு திசை தான் எப்போதும் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும், குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சிறு சிறு சண்டைகள், அடிக்கடி ஏற்படும் சச்சரவு, தேவையற்ற வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் இவை அனைத்தும் தீரும்.கிழக்கு திசையில் வைப்பதால் முக்கியமாக வீட்டில் செல்வ வளம் பெருகுவதோடு, வாழ்க்கையில் இது வரை நீங்கள் எட்டாத வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும் தீய சக்திகளை தடுக்கும்.

குபேர பொம்மையை படுக்கையறை, ஹால் அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அவ்விடங்களில் தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், உங்கள் தொழிலில் நல்ல வருமானமும் கிடைக்கும்.

அறிவியல் பார்வையில் சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது உங்கள் மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு உங்கள் வாழ்வில் புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.புத்த மதத்தில் இந்த பொம்மையை இன்றளவும் கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ ஒரு போதும் கூடாது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *