பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கான சம்பளத்தில் 700 ரூபா உயர்வு – சஜித்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் என உறுதியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு சஜித் பிரேமதாச உரையாற்றுகையில், “மறைந்த தலைவர் காமினி திசாநாயக்காவின் பிறந்த தினத்தில் கொத்மலை நகரில் மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். காமினி திசாநாயக்கவின் புதல்வர்களான நவீன் திசாநாயக்க, மயாந்த திசாநாயக்க ஆகியோரின் சக்தியில் சக்தி மிக்க புதிய நாட்டை உருவாக்குவேன்.

இன்று நாட்டுக்கு தேவை எறும்பை போல் பயணித்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க கூடிய தலைவராக செயற்படுவது.

நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்று அபிவிருத்தியை செய்வதற்கான வயது எம்மிடம் உண்டு. கலாவதியாகியவர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக போட்டி போடுவது அர்த்தம் இல்லை.

பொதுமக்களின் சக்தியினைக் கொண்டு புதிய ஒரு நாட்டினை உருவாக்குவேன். தேயிலைத் தொழிலை முன்னெடுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மாதாந்தம் 14000 ரூபாயையே சம்பளமாக பெறுகின்றனர். அப்படியென்றால் நாளொன்றுக்கு 700 ரூபாயை பெறுகின்றனர். ஆனால் 4 பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 50,000 தொடக்கம் 55,000 ரூபாய் வரை அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்ல தேவைப்படுவதாக புள்ளி விபரம் கூறுகிறது.

இந்நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை வழி நடத்தும் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் சார்பாக நாளொன்றுக்கு 1500 ரூபாவை சம்பமாக வழங்க உறுதி வழங்குகின்றேன்.

இன்று 350 ரூபாய்க்கு உரம் வழங்குவதாக எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் விவசாயிகளை வெவ்வேறாக பிரிக்காது அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகவே உரங்களை வழங்குவேன்.

எனக்கு விவசாயிகளை பிரித்துப் பார்க்க முடியாது. தேயிலை துறையை முழுமையாக அபிவிருத்தி செய்வேன். பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பகல் உணவும் சீருடைகள் இரட்டிப்பாக வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொழில் பயிற்சி நிலையங்களில் டிஜிட்டல் கணினி மயமாக்கம் ஆங்கில அறிவு மத்திய நிலையம் என உருவாக்குவேன். இந்த சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக ஜனசவிய என்ற உதவியும் வழங்கப்படும்.

எறும்பை போல் என்னோடு இணைந்து செயற்படுபவர்களுக்கு நான் ஆதரவை வழங்குவேன். குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கப் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *