முல்லைத்தீவு, இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வளாகத்தில் சுற்று மதில் கட்டுமான வேலைக்கான அத்திவாரம் வெட்டிய போதே புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகளின் சீருடைகள், சீருடைத் துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.
இறுதி யுத்த காலப்பகுதியில் கடுமையான போர் நடைபெற்ற இடமாக இரணைப்பாலை காணப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



Leave a Reply