
யாழ்ப்பாணம்-போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 68 பேரின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதி இந்திய அமைதிகாக்கும் படையினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் 21 மருத்துவ சேவையாளர்களுடன், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் உயிரிழந்தனர்.
Leave a Reply