குருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் மேஷ ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எதிலும் துணிச்சலுடன், இறங்கிப் போராடும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். நன்மையடையும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று.

உங்கள் திறமைகள் வளர்த்துக்கொள்ள தக்க பயிற்சிகளைச் செய்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். சோம்பலை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தடைபட்டு வந்த பல்வேறு விஷயங்கள் இப்போது வெற்றிகரமாக நடைபெறும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாதிகள் குறையும். குடும்பத்துடன் புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகம், வருமானம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரப்போகும் நேரமிது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வேறு புதிய தொழிலிலும் ஈடுபட்டு இரட்டை வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது. அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

படிபடியாக கஷ்ட பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெரும் ராஜயோக பலன்கள் நடைபெறும் காலகட்டமிது. நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடுவீர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். வழக்குகளால் சாதகமான பலனை காண்பீர்கள். புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருவாய் கிடைக்கும். நெடுநாட்களாக விற்காமல் இருந்த சொத்தும் நல்ல விலைக்கு வரும். வழக்கின் மூலம் நிலம் கைவிட்டுப் போனாலும் அது மேலிடத்து அப்பீல் பேரில் மீண்டும் கைக்கு வந்து சேர்ந்துவிடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும், வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயர்ந்தநிலையில் இருக்கும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு..

அலுவலகத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியைக் காண்பார்கள். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் அசாத்தியத் துணிச்சல் உங்களின் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டும் வகையில் நிலைமை உருவாகும்.

வியாபாரிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பல வழிகளில் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். உங்களின் அதிர்ஷ்ட விற்பனையைச் சீர்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு இந்த காலகட்டத்தில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். அதே சமயம் கடையை விரிவுபடுத்த சிறிது செலவு செய்யலாம்.

விவசாயிகளுக்கு..

விளைச்சல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தைப் பங்குபோடக் காத்திருப்பார்கள். பூச்சி மருந்துக்கும், கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு..

பொதுச்சேவையால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் ஆனாலும் தேவையில்லாமல் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். கட்சி மேலிடம் உங்களின் கோரிக்கைகளைக் கருணையுடன் பரிசீலிக்கும். அரசாங்க அதிகாரிகளால் சில நன்மைகளையும் பெறுவீர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் மாற்றுக்கட்சியினரும் ஒத்துழைப்புத் தருவார்கள்.

கலைத்துறையினருக்கு..

முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் செயல்கள் அனைத்தும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் செயல்களில் தனி முத்திரையைப் பதிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மற்றபடி ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகமாகும்.

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் விரக்தியிலிருந்து விடுபடுவார்கள். தங்களை நாடிவரும் உறவினர்களுக்கு தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரிடம், அன்பைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண யோகாக பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்.

மாணவமணிகளுக்கு..

படிப்பில் அக்கறை காட்டுவார்கள். அதேநேரம் நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ராம பக்த அனுமனை வழிபட்டு வரவும்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *