
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் வழங்கப்படவுள்ளன.
இன்று முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 3ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ தினம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply