யாழ்ப்பாணம் நெல்லியடியில் விஜய்க்கு 25 அடி கட்அவுட் வைத்து மகிழ்ந்துள்ளனர் அந்த பகுதி வாலிபர்கள் சிலர்.
தென்னிந்திய நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையிலும் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதற்காக நேற்று இரவே தியேட்டர்களின் முன்பாக தவம் கிடந்த ரிக்கெட் வாங்கிய காட்சிகளை காண முடிந்தது.

யாழ் நகரில் உள்ள திரையரங்கொன்றில் பிகில் வெளியாவதை முன்னிட்டு மத்திய பேருந்து நிலைய பகுதியில் வாழைமரங்கள் கட்டி அலங்கரித்திருந்தனர் ரசிகர்கள்.
இந்த நிலையில் நெல்லிடிய வாலிபர்கள், 25 அடி கட்அவுட் வைத்துள்ளனர். நெல்லியடி பேருந்து நிலையத்தின் முன்பாக கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply