
வடக்கு நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் சிநேக பூர்வமாக மோதிக்கொள்ளும் கடினப்பந்து போட்டி இன்று விமர்சையாக ஆரம்பமானது. குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வ இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.
10வது முறையாக இடம்பெறும் குறித்த போட்டியின் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர், குாட்டக்கல்5ி பணிப்பாளர், அயல் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதையடுத்து கிளிநாச்சி இந்துக்கல்லூரி மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் வரவேற்ககப்பட்டனர். இதன்புாது வெற்றிக்கிண்ணத்தினை இரு அணிகளின் தலைவர்களும் ஏந்தியவாறு போட்டி வீரர்களும் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டதை அடுத்து தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வும் நடார்த்தப்பட்டது, தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களால் அணி வீரர்கள் கைலாகு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் தமிழர் கலை பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில் மாணவர்களின் ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, கோலாட்டம், காவடியாட்டம், கரகம் உள்ளிட்ட நடனங்கள் மைதானத்தை அலங்கரித்தமை விசேட அம்சமாகும்.

தொடர்ந்து விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கரு்தது தெரிவித்த வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.இளங்குாவன்வாழ்த்துரை நிகழ்த்தினார். நகர் புற பாடசாலைகள் புான்று இங்கும் குறித்த விளையாட்டானது வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது வியக்க தக்கதாக உள்ளதாகவும், இதனை ஏற்பாடு செய்த பாடசாலை சமூகத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


Leave a Reply