
இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் தமிழ் மக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
எனினும் குறித்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகின்ற நிலையில் அடுத்த நாளான (28ஆம் திகதி) திங்கட்கிழமை இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் தவிர அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
என்ற போதும் விடுமுறை வழங்கப்படும் குறித்த தினத்திற்கு பதிலாக மற்றுமொரு நாளில் கற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply