
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரித்து வழங்குமாறு, இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் குழுவொன்று விண்ணப்பம் செய்துள்ளது.
வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனிடம் கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் குழுக்களாக உடைந்ததன் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply