
வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குருமன்காட்டுச் சந்தியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணியளவில் நிறுத்தபட்டிருந்த ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவை பார்வையிட்டபோது ஹயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள வைரவபுளியங்குளத்தில் சஜித் பிரேமதாசாவின் பங்கேற்புடன் பிரசாரக்கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply