
மன்னார் மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரம் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

இந்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளிட்ட பல குருக்கள் மற்றும் கத்தோலிக்க அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply