
ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான எதிர்காலம் உறுதி செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியின் கீழ் நாட்டின் மூத்த குடிமக்களை அங்கீகரித்து பொறுப்புகளை ஒப்படைப்போம் என கூறினார்.
மேலும் நாட்டின் பழைய தலைமுறையினர் கண்ணியத்துடன் வாழக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்துவோம் என்றும் எஸ்.பி.திசாநாயக்க உறுதியளித்தார்.
Leave a Reply