
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 120 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் சுமார் 120 கிலோ கிராம் எடையுடைய 60 கஞ்சா பொதிகளை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply