
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வீரரான ஹஷிம் அம்லா, கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்கு துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரின் பின்னர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற ஹஷிம் அம்லா, வெளிநாட்டு ரி-20 கிரிக்கெட் லீக் தொடர்களில் மட்டும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது, தென்னாபிரிக்காவில் நடைபெறும் எம்.எஸ்.எல் ரி-20 தொடரில் விளையாடும் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்கு துடுப்பாட்ட ஆலோசகராக ஹஷிம் அம்லா, நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், எம்.எஸ்.எல் ரி-20 தொடரில் இம்மாதம் 25ஆம் திகதிக்குப் பின்னரே அம்லாவிற்கு துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எல் ரி-20 தொடரில், பயிற்சியாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள ரி-10 லீக் கிரிக்கெட் தொடரில், கர்நாடாக டஸ்கர்ஸ் அணிக்கும் ஹஷிம் அம்லா தலைவராக செயற்படவுள்ளார்.
கேப் டவுன் பிளிட்ஸ் அணி, கடந்த ஆண்டு இரண்டாமிடம் பிடித்தது. நடப்பு ஆண்டு கேப் டவுன் பிளிட்ஸ் அணி, தனது முதல் போட்டியில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.
Leave a Reply