சுதந்திரமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளமை நாட்டின் வெற்றி – ஜனாதிபதி

இம்முறை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை மிக சுதந்திரமாகவும், நீதியானதாகவும், அமைதியானதாகவும் முன்னெடுக்க முடிந்துள்ளமை நாட்டின் வெற்றியாகுமெனவும் கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான அரசியல் மறுசீரமைப்புகள் காரணமாகவே இந்த ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்த முடிந்துள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மூவரின் நற்சான்றுப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் நேற்று(04) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

லெபனான் குடியரசு, நைஜீரியா மற்றும் ஐரோப்பிய சங்கம் ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
01- Mr. RableNarsh – Ambassador of the Republic of Lebanon
02- Maj.Gen. ChrisEze – High Commissioner of the Federal Republic of Nigeria
03- Mr. Denis Chalbi – Ambassador of the European Union


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *