ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வின் இறுதி பயணம் யாழில்

யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம் இறுதி நாளை எட்டியுள்ளது.

இதன் இறுதிநாள் விழிப்புணர்வு பயணம் இன்று (புதன்கிழமை) யாழ். நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நவம்பவர் 2ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு குறித்த விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு யாழ். நகரப் பகுதியில், மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்ற ஊடகவியலாளர்கள், யாழ்.பிரதான பேருந்து நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.

இவ் வழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *