
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலுடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள அன்னசத்திர வீதியில் சற்றுமுன் புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.

மீன் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது..
ரயில் மோதியதுடன் மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Leave a Reply