ஜனாதிபதி தேர்தல் – 120 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை!

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 120 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

7 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர பல்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க இந்தியா, பூட்டான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தென் கொரியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுமார் 60 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *