தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பம்

யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 – 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் உள்ளடங்கலாக இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்படக்கூடிய சாத்தியமான அனர்த்தங்களிலிருந்து வாக்காளர்களின் வாக்களித்தலை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் செவ்வாய்க் கிழமை (12.11.2019) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களிற்கு அனர்த்தங்களின் போது பாதுகாப்பு, அனர்த்தங்களின் போது மாற்றீடான வாக்களிப்பு நிலையங்களை உருவாக்குதல், பருவகால மழைவீழ்ச்சி பற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கைகள் கிடைக்கப்பெறும்போது பிரதேச செயலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *