
தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் சட்டங்களை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பெறுபேறுகளை முதலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைதளத்தில் வெளியிடவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply