
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை(வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் சு.ஆ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply