
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அவசர நிலைமை குறித்த உடனுக்குடன் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக குறுந்தகவல் (SMS)- ‘MOD ALERTS’- சேவையை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இந்த சேவையை நேற்று பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நேற்று (13) பாதுகாப்பு அமைச்சில் கேட்போர் கூடத்தில இடம்பெற்றது.
தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு, டயலொக், மொபிடெல், எயார்டெல், ஹட்ச், லங்காபெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த SMS சேவை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவுள்ளது.
Leave a Reply