யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள்

இந்தியாவில் இருந்து அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும், இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாண விமானநிலையத்தின் விமான சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண  சுற்றுலாத்துறை தொடர்பிலும் பல்வேறு விடயங்கள்; இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. 

இதன்மூலம் இந்தியாவில் இருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தளம் மற்றும், புராதான காலாசார இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது. 

சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார சமய இடங்களை இனங்காணுவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *