
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதடி – நுணாவில் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி (வயது -42) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், நிறுவன காவல் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு சென்றபோதே இந்த விபத்து நேர்ந்தது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply