
வளி மாசடைவு தன்மை குறையாத காரணத்தினால் புதுடில்லியில், பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் கடந்த சில வாரங்களாக வளி மாசடைவு அதிகரித்து வரும் நிலையில், இந்திய உச்ச நீதிமன்றமும் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், வளி மாசடைவு குறையாத சூழலில் நேற்று முதல் 2 நாட்களுக்கு புதுடில்லியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், புதுடில்லி உட்பட ஏனைய சில பகுதிகளில், புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் உள்ளிட்டவை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை மூடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply