
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைகேடுகளாக இன்றுவரை 45 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. அவை தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சிறிய முறைப்பாடுகள்.
இருப்பினும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமுகமாக தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply