
நீண்டதொரு சர்ச்சைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரில் விளையாடுவதற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, மீண்டும் அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதன்படி சுமார் 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணிற்கு சென்று இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக அமையவுள்ளது.
Leave a Reply