தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி. சாதாரண அமைதியானதும், சுமுகமானதுமான தேர்தலை நடார்த்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலிற்காகன ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுளு்ளது. அந்த வகையில் இன்று காலை 7.45 மணிமுதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்கள் நோக்கி தேர்தல் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் எடுத்து சென்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளிற்காக 1750 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், மாவட்டத்தில் 100 வாக்களிப்ப நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்களிப்பு நிறைவு பெற்றதும், வாக்குகளை எண்ணுவதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், வாக்களிப்பு நிலையங்களிற்கு 2 பொலிசார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காலை 7 மணி தொடக்கம் 5 மணிவரை மக்கள் வாக்களிப்பதற்காக நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளிற்காக மாவட்ட செயலகத்தில் ஒரு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முறைப்பாடுகள் இருப்பின் கீழ்வரும் இலக்கங்களான 0213900151, 0213034051 தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் மாவட்ட செயலாளரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
Leave a Reply