
வவுனியா ஏ9 வீதி சோயா ஓழுங்கைக்கு அண்மையில் இன்று மாலை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த பெண்மணி வவுனியா நகரில் அமைந்துள்ளஆலயத்திற்கு சென்றுவிட்டு சோயா வீதியில் அமைந்துள்ள அவரது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் உரியமுறையில் சமிஞ்சை விளக்குகளை பயன்படுத்தி சிறுவீதியூடாக திரும்ப முற்பட்டுள்ளார்.
இதன்போது அதே திசையில் வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த இராசேந்திரங்குளம் பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அவரை மோதியுள்ளது. இதனால் தூக்கிவீசப்பட்ட பெண்மணி பலத்த காயங்களிற்கு உள்ளானார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி சில நிமிடங்கள் அப்பகுதியில் நின்றுவிட்டு பேருந்துடன் அப்பகுதியில் இருந்து அகன்று சென்றுள்ளார்.

இந்நிலையில் வீதியால் பணித்த சிலர் காயமடைந்த பெண்மணியினை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வவுனியா இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள “ஒமேகாலைன்” ஆடைதொழிற்சாலைக்கு ஊழியர்களை, ஏற்றிஇறக்கும்(பேருந்துஇலக்கம் NP -NA 1333)பேருந்தே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பேருந்தின் இலக்கத்தின் மூலம் அதன் சாரதியை கைதுசெய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
Leave a Reply