
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோதுமை மாவிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி மீண்டும் கோதுமை மாவின் விலையை 8 ரூபாயால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மிகவும் சூட்சுமமான முறையில் இவர்கள் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதால் தற்போது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோதுமை மா விநியோகஸ்தர்களின் கணினி தொழில்நுட்பமும் முடக்கப்பட்டுள்ளதால் வர்த்தகர்களுக்கு அவர்களைத் தொடர்பு கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது.
அதேவேளை கோதுமை மா ஒரு கிலோவின் விற்பனை விலை 87 ரூபாயாகவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதனைவிட அதிகமான விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் நுகர்வோர் அதிகார சபையிடம் கேட்டுக்கொள்கின்றாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply