
தனது ஜனநாயக கடமையை தான் சிறப்பாக ஆற்றிவிட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் வாக்களிப்பு இன்று (சனிக்கிழமை) விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வாக்களிக்க தகுதியுடைய அனைவரையும் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த பதிவில் “இன்று, ஆசியாவின் பழமையான ஜனநாயக அரசின் மில்லியன் கணக்கான பொது மக்களுடன் சேர்ந்து எங்கள் மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் பங்கேற்க்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் உரிமை, அது உங்கள் சக்தி, அது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்கள் வாக்களிக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள்” பதிவிட்டுள்ளார்.
Leave a Reply